சொத்துக்களுக்கான நீண்ட கால மூலதன ஆதாயம்


சொத்துக்களுக்கான நீண்ட கால மூலதன ஆதாயம்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:40 PM IST (Updated: 8 Jun 2019 12:40 PM IST)
t-max-icont-min-icon

வங்கியில் வீட்டுக்கடன் பெற்று வாங்கப்பட்ட அல்லது கட்டப்பட்ட வீட்டை, கடன் பெற்றவர் தனது சொத்தாக கருத இயலாது.

ங்கியில் வீட்டுக்கடன் பெற்று வாங்கப்பட்ட அல்லது கட்டப்பட்ட வீட்டை, கடன் பெற்றவர் தனது சொத்தாக கருத இயலாது. அதுவும் ஒரு வகையில் கடனாகத்தான் (Liability) சொல்லப்படும். அதாவது, பெற்ற கடனை திருப்பி செலுத்தும் வரை, அது வங்கியின் சொத்து என்பதுதான் நிதியியல் ரீதியான உண்மையாகும். பொதுவாக, வீடு, மனை, நிலம், கட்டிடம் ஆகியவை அசையாச் சொத்துக்கள் (Assets) என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன், அணிகலன்கள், காப்புரிமைகள், பங்கு உரிமை மற்றும் இயந்திரங்கள் ஆகியவை மூலதன சொத்துக்களாக (Capital Assets) சொல்லப்படுகிறது. அசையா சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருமானம், சொத்தினை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்யப்படும் நிலையில், அது குறுகிய கால மூலதன ஆதாயம் (Short term Capital Gains) எனப்படும். 24 மாத காலகட்டத்திற்கு மேலாக உள்ள நிலையில் அது நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும்.

Next Story