மாடிப்படிகளுக்கான இடம்


மாடிப்படிகளுக்கான இடம்
x
தினத்தந்தி 5 July 2019 9:45 PM GMT (Updated: 5 July 2019 11:05 AM GMT)

குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கான மாடிப்படிகளை மேற்கு, தெற்கு, ஆக்கினேயம் மற்றும் வாயவியம் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பதே நல்லது.

குடியிருப்புகள் மற்றும் வீடுகளுக்கான மாடிப்படிகளை மேற்கு, தெற்கு, ஆக்கினேயம் மற்றும் வாயவியம் ஆகிய பகுதிகளில் கட்டமைப்பதே நல்லது. மேலும், படியில் ஏறும்பொழுது மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கியவாறு ஏறும் வகையில் முதல் படியை அமைத்துக் கொள்வதும் முக்கியம்.

தண்ணீர் தொட்டி அமைப்பு

நிலத்தடி தண்ணீர்த் தொட்டியை அமைக்க, மற்ற இடங்களை விட வடக்கு, கிழக்கு மற்றும் ஈசானியம் ஆகிய பாகங்கள் ஏற்றவை. வீட்டின் மாடியில் அமைக்கப்படும் மேல்நிலை தொட்டிகளை அமைக்க இதர பகுதிகளை விடவும் மேற்கு, தெற்கு மற்றும் நைருதி பாகங்கள் ஏற்றவையாகும்.

கதவுகளுக்கான மர வகைகள்

வீட்டின் நிலை, சன்னல், கதவுகள் ஆகியவற்றை ஒரே மர வகையால் செய்யப்படுவதை சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. இல்லாவிட்டால், இரண்டு விதமான மர வகைகளால் அமைத்துக் கொள்ளலாம். இரண்டுக்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்டு கதவு மற்றும் நிலை ஆகியவை செய்யப்பட்டிருப்பது நல்ல பலன்களை அளிக்காது.

பொதுச்சுவர் கட்டமைப்பு

வீட்டின் எந்த பாகத்திலும் பொதுச்சுவர் அமைப்பு நல்லதல்ல. காம்பவுண்டு சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்கு திசைகளில் பொதுச்சுவராக அமையலாம். ஆனால், வடக்கு அல்லது கிழக்கு திசையில் பொதுச்சுவர் கூடாது. வர்த்தக, தொழில் இடங்களுக்கு இந்த விதி பொருந்தாது.

Next Story