அதிகரித்து வரும் ‘எம்–சாண்ட்’ பயன்பாடு


அதிகரித்து  வரும்  ‘எம்–சாண்ட்’  பயன்பாடு
x
தினத்தந்தி 27 July 2019 3:00 AM IST (Updated: 26 July 2019 4:03 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு மேலை நாடுகளில் கட்டுமானப்பணிகளுக்கு எம்–சாண்ட் என்ற செயற்கை மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ல்வேறு மேலை நாடுகளில் கட்டுமானப்பணிகளுக்கு எம்–சாண்ட் என்ற செயற்கை மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நமது பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எம்–சாண்ட் பரவலாக அறிமுகம் ஆன நிலையில், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மலைகளில் உள்ள கருங்கல் பாறைகளை நவீன இயந்திரங்களின் மூலம் 2.35 மி.மீ முதல் 4.75 மி.மீ அளவு கொண்ட கன சதுர வடிவில் உடைத்து, அரைக்கப்பட்டு, நீரினால் கழுவிய பின்னரே எம்–சாண்ட் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அதாவது, மலைகளில் உள்ள பாறைகளை மழைநீர் உருட்டி, அரைத்து ஆற்று மணல் படிவமாக மாற்றப்படும் இயற்கையின் செயல்முறையை செயற்கையாக உருவாக்கி எம்–சாண்ட் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story