குடியிருப்புகள் தேவைக்காக உருவாகும் செயற்கை தீவு
ஹாங்காங் நகர நிர்வாகம் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கான பற்றாக்குறையை சமாளிக்க செயற்கையாக ஒரு தீவை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஹாங்காங் நகர நிர்வாகம் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கான பற்றாக்குறையை சமாளிக்க செயற்கையாக ஒரு தீவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உலக அளவில் மிகப்பெரியதாக அமைய உள்ள அந்த தீவை கட்டமைக்க ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மலிவு விலை குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியாக குறிப்பிடப்படும் ஹாங்காங்கின் பெரிய தீவான ‘லான்டாவ்’ அருகில் இந்த புதிய தீவை அமைக்க இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2400 ஏக்கர் பரப்பில் இந்த செயற்கை தீவு அமைக்கப்படும் பட்சத்தில், பொதுமக்களின் குடியிருப்புகளுக்கான தேவையில் பெருமளவு பூர்த்தி செய்யப்படும் என்று ஹாங்காங் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தீவை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டில் துவங்கப்பட்டு, 2032-ம் ஆண்டில் புதிய தீவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தீவானது கிட்டத்தட்ட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கட்டமைக்கும் விதத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான துபாய் பனை மரத் தீவான ஜுமைரா மற்றும் ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக்காட்டிலும் பல மடங்கு பட்ஜெட் கொண்டதாக இந்த செயற்கை தீவு அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story