பெருகி வரும் எம்-சாண்ட் பயன்பாடு


பெருகி வரும் எம்-சாண்ட் பயன்பாடு
x
தினத்தந்தி 24 Aug 2019 3:02 PM IST (Updated: 24 Aug 2019 3:02 PM IST)
t-max-icont-min-icon

ஆற்று மணலுக்கான தேவையை எம்-சாண்ட் முழுமையாக ஈடு செய்யாவிட்டாலும் ஓரளவிற்கு சமாளிக்கக்கூடியதாக இருந்து வருகிறது.

கட்டுமானப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் செயற்கை மணலை பயன்படுத்தலாம் என்பதுடன் ‘பிளாஸ்டரிங்’ என்ற சுவர் மேற்பூச்சு பணிகளுக்கும் ஆற்று மணல் மற்றும் ‘எம்-சாண்ட்’ ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து உபயோகிக்கலாம் என்று வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

உறுதியான கட்டமைப்புகளுக்கு ‘எம்-சாண்ட்’

எம்-சாண்ட் மூலம் தயார் செய்யப்படும் கலவை மற்றும் கான்கிரீட் ஆகியவற்றின் வலிமையை, ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது சுமார் 20 சதவிகிதம் வரை கூடுதலாக இருப்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எம்-சாண்ட் மூலம் அமைக்கப்படும் கட்டிடம் அமிலத்தன்மையை தாங்கி நிற்கும் திறன் கொண்டது. மேலும், குப்பைகள், களிமண் மற்றும் கூழாங்கற்கள் ஆகியவற்றின் கலப்பு இருக்காது என்பதால் அதை சலிக்க வேண்டிய செலவும், நேரமும் குறைக்கப்படுகிறது.

கட்டுமானப்பணிகளில் ‘குவாரி டஸ்ட்’

கருங்கல் ஜல்லிகள் உடைக்கும் பணிகளில் மீதமானவற்றை அரைத்து ‘குவாரி டஸ்ட்’ தயாரிக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் தவிர, சுவர் பூச்சு வேலைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். அடித்தளத்தில் மட்டம் சரி செய்வது, சாதாரண கான்கிரீட் கலவை, செங்கல் கட்டுமான வேலைகள், தரையிலிருந்து தளமட்டம் வரை நிரப்பும் பொருள் ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தலாம். மேலும், கட்டுமானப்பணிகளில் ஆற்று மணலுடன் 35 சதவிகிதம் கலந்தும் பயன்படுத்தலாம் என்றும் கட்டுமானப் பொறியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story