உங்கள் முகவரி

விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை + "||" + The records referred to in the sales deed need attention

விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை

விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை
வீடு அல்லது மனைக்கான விற்பனை பத்திரம் என்ற கிரைய பத்திரம் எழுதும் சமயங்களில் சொத்து அமைந்துள்ள வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் ஆகியவற்றை தனித்தனியாக குறிப்பிட வேண்டும்.
இரண்டும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதையே வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் என்று தனித்தனியாக எழுதுவது முறை. மேலும், இடத்திற்கான கிராம எண், சர்வே எண் ஆகிய இரண்டு எண்களை சரியாக குறிப்பிடுதல் அவசியம். பட்டா எண், அதன் உட்பிரிவு இருந்தால் அதன் புதிய சர்வே எண் ஆகியவை தெளிவாக இருப்பது முக்கியம்.

சரியான அமைவிடம்

குறிப்பிட்ட ஒரு சொத்து கூட்டுப் பட்டாவில் இருந்தால், சர்வே எண்ணின் ஒட்டு மொத்த பரப்பளவை குறிப்பிட்டு, வாங்கப்படும் இடம் எந்த திசையில் இருந்து தொடங்குகிறதோ அதற்கேற்ப வடக்கு பாகம், தெற்கு பாகம், கிழக்கு பாகம், மேற்கு பாகம் என்று குறிப்பிட வேண்டும். மேலும், அந்த பாகத்தில் உள்ள மனைக்கான அளவுகளை தென்வடல் அளவு மற்றும் கிழமேல் அளவு என்று கச்சிதமாக குறிப்பிட்டு காட்டுவது முக்கியம்.

கச்சிதமான அளவுகள்

பழைய பத்திரங்களில் உள்ள நீளம், அகலம் ஆகியவை முழம், கெஜம் அல்லது லிங்ஸ் ஆகிய அளவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில், அவற்றை தற்போது நடைமுறையில் உள்ள அடி மற்றும் மீட்டர் ஆகிய அளவுகளாக மாற்றி கச்சிதமாக எழுதப்பட வேண்டும். சொத்து கூட்டுப் பட்டாவில் அமைந்திருந்தால் அதன் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றை அடி மற்றும் மீட்டர் ஆகிய அளவுகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

சுற்றுப்புற சர்வே எண்கள்

குறிப்பிட்ட மனை அல்லது வீட்டுக்கான நான்கு பக்கத்தில் உள்ள எல்லைகள் குறித்த விவரங்களை குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் பெயரை குறிப்பிடுவதை விட அந்த இடம் அல்லது மனையின் சர்வே எண்ணை குறிப்பிட்டு எழுதுவதே எப்போதும் பாதுகாப்பானது. காரணம், இன்றைய நகர்ப்புற சூழலில் குறுகிய காலத்தில் உரிமையாளர்கள் மாறிவிடக்கூடும். அதுபோன்ற நிலையில் மாறாத பட்டா எண்ணே பல சிக்கல்களை தீர்க்கும்.

வாங்கப்படும் மனை அல்லது இடத்தில் கட்டிடம், கிணறு, EB சர்வீஸ், பொது வழி, பொதுச்சுவர், பொது தண்ணீர் உரிமை ஆகியவை பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதன் மூலம் பல எதிர்காலச் சிக்கல்கள் தவிர்க்கப்படும்.