அறைகளுக்கு பொருத்தமான சர விளக்குகள்
‘சாண்டலியர்கள்’ என்ற சர விளக்குகள் அறைகளுக்கு வெளிச்சத்தை அளிப்பதுடன், அழகையும் தருகின்றன.
‘சாண்டலியர்கள்’ என்ற சர விளக்குகள் அறைகளுக்கு வெளிச்சத்தை அளிப்பதுடன், அழகையும் தருகின்றன. அவை பல்வேறு வகையான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை சர விளக்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வீட்டில் உள்ள அறை அல்லது ஹாலின் நீள அகலங்களை பெருக்கி வரும் விடையை 1.5 என்ற எண்ணோடு பெருக்கி வரும் விடை எதுவோ அந்த அளவு ‘வாட்’ பல்புகள் கொண்ட ‘சாண்டலியர்’ பொருத்தப்படுவது முறை. உதாரணமாக, அறை 10அடி அகலம் 16அடி நீளம் என்றால் அதன் மொத்த அளவு 160 சதுர அடியாகும். அத்தோடு 1.5-ஐ பெருக்கினால் 240 வருகிறது. எனவே 40 வாட்டு மின்சக்தி கொண்ட 6 பல்புகள் கொண்ட ‘சாண்டலியர்’ போதுமானது.
அறைக்கு பொருத்தமான ‘சைஸ்’ கண்டுபிடிக்க அறையின் நீள-அகலங்களை கூட்டி, வரக்கூடிய விடையை அங்குலமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது 10 அடி அகலம், 16 அடி நீளம் கொண்ட ‘ஹாலின்’ நீள அகலங்களை கூட்டினால் வரும் 26 அங்குல குறுக்களவு கொண்ட சர விளக்கு அதற்கு பொருத்தமாக இருக்கும்.
Related Tags :
Next Story