‘கட்டுமானப் பணிகளை சரியாகத் திட்டமிட வேண்டும்..’


‘கட்டுமானப் பணிகளை சரியாகத் திட்டமிட வேண்டும்..’
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 7:50 PM IST)
t-max-icont-min-icon

கட்டுமானப் பணிகளை கச்சிதமாகத் திட்டமிட்டு அதனை மனதில் வைத்துக்கொண்டு பணிகளைத் தொடங்குவது நல்லது.

வல்லுனர்  கருத்து 

‘எந்த ஒரு கட்டுமானப்பணியையும் துவங்குவதற்கு முன்னர் அதற்குரிய அனைத்து ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்கள் (Approval from Respective Authorities) ஆகியவற்றை முன்கூட்டியே பெற்ற பின்னர்தான் வேலைகளைத் தொடங்க வேண்டும். குறிப்பாக, கட்டுமானப் பணிகள் முடியும் வரை மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான பணிகளை கச்சிதமாகத் திட்டமிட்டு, அதனை மனதில் வைத்துக்கொண்டு பணிகளைத் தொடங்குவது நல்லது. Clarity in Sequence of Work from Starting to end should be well understood (ஆரம்பம் முதல் முடிவு வரை செய்யும் பணிகளுக்கான வரிசை முறை பற்றிய தெளிவான புரிதல் அத்தியாவசியம்) என்பதற்கேற்ப தொடங்கும் பணியில் எவ்விதமான தடைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் திட்டமிட்ட கால நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடித்து விட இயலும். 

உதாரணத்திற்கு ஒரு கட்டமைப்பில் அதன் அஸ்திவாரப் பணிகள்தான் எப்போதுமே எதிர்பாராத சங்கடங்களைக் கொடுக்கும். அதாவது, திட்டமிட்டபடி Isolated Footing அமைப்பில் மாற்றம் செய்து Pile Foundation அமைப்பாக செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பூமிக்கு கீழ்ப்பகுதியில் என்ன உள்ளது என்பதை முழுமையாக அறிந்த பின்னரே திட்டம் தீட்டலாம் என்பது சாத்தியமில்லை. அதனால், மண் பரிசோதனை செய்த பின்னர் கட்டமைப்புக்கான திட்டத்தை மேற்கொண்டால் எதிர்பாராத மாற்றங்களை தவிர்க்க இயலும். அதே போல் மண் சரிவு, நிலத்தடி நீர்மட்டம் திடீர் உயர்வு, தொடர் மழை போன்ற இடையூறுகளையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம். ஒரு கட்டிடத்தின் அஸ்திவார அமைப்பு பணியை மழையில்லா நேரத்தில் செய்து முடித்து, தரைமட்டத்திற்கு மேல் கட்டுமானப் பணிகளை கொண்டு வந்துவிட்டால் மற்ற எல்லா வேலைகளையும் எளிதில் செய்து முடித்து விடலாம்..’

   –முனைவர், கர்னல் பொ. நல்லதம்பி, கட்டமைப்பு பொறியியல் வல்லுனர்.

Next Story