சமையலறைக்குள் ஏற்படும் வெப்பத்தை தவிர்க்கும் வழிகள்


சமையலறைக்குள் ஏற்படும் வெப்பத்தை தவிர்க்கும் வழிகள்
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM GMT (Updated: 1 Nov 2019 4:24 PM GMT)

சமையல் செய்யும் நேரங்களில் ‘சிம்னியின்’ மின்விசிறிகளை தவறாது பயன்படுத்த வேண்டும். ‘எக்ஸ்ஹாஸ்ட்’ மின்விசிறி இருந்தால் அதை இயங்கும்படி செய்ய வேண்டும்.

சமையலறையில் உள்ள ஜன்னல்களை அதிக நேரம் திறந்து வைத்திருப்பது அல்லது மாலை நேரங்களில் அனைத்து ஜன்னல்களையும் நன்றாக திறந்து வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் சமையலறைக்குள் வெப்பக்காற்று தங்கி விடாமல் தவிர்க்கலாம்.

அதிகமாக உபயோகத்தில் இல்லாத மற்றும் தேவையற்ற பொருட்களை பலரும், சமையலறை பரண் மீது போட்டு வைத்திருப்பார்கள். அவை வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கின்றன என்ற நிலையில் அறை வெப்பம் அதிகரிக்கவும் காரணமாகின்றன. வாய்ப்பும், இடமும் இருப்பவர்கள், சமையலறையில் சிறு பாத்திரங்களில் போன்சாய் மரங்கள் மற்றும் மனம் கவர் மலர் தொட்டிகளை வைப்பதும் குளிர்ச்சி அளிக்கும்.

Next Story