வீடியோ கண்காணிப்பு
வீட்டுக்குள் இருந்தவாறே வெளிவாசல் கதவுக்கு அருகில் நிற்பவர்கள் யாரென்று அறிந்து கொண்டு, அவருடன் பேச வீடியோ கன்காணிப்பு (Video Door System) உபகரணம் பயன்படுகிறது.
வீடியோ கன்காணிப்பு உபகரணத்தை பொருத்துவதன் மூலம் கதவை திறக்காமலே வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என்பதை சிறிய திறையில் வீட்டுக்கு உள்ளிருந்தே காணலாம். அவர்களது வருகையைக் கண்டு தேவைப்பட்டால் மட்டும் அவர்களோடு பேசலாம்.
அதன் பின்னர், அவசியத்திற்கேற்ப கதவை திறக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் உள்ளே வருவதை தவிர்க்கலாம். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பாதுகாப்புக்கு ஏற்ற சாதனமாகவும் உள்ளது. கதவுக்கு அருகில் யாரெல்லாம் வந்தார்கள், காலிங் பெல்லை யாரெல்லாம் உபயோகப்படுத்தினார்கள் என்பதைக்கூட இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
Related Tags :
Next Story