கான்கிரீட் கலவைக்கு சரியான அளவு தண்ணீர் அவசியம்
குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக சேர்க்கப்படும் தண்ணீர் கான்கிரீட்டின் உறுதியைக் குறைத்து விடுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கட்டுமானப் பணிகளில் தண்ணீர் சேர்க்கப்படும் அளவை பொறுத்தே கலவையின் உறுதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது, சிமெண்டு, மணல் ஆகியவற்றின் கலவையில் கலக்கப்படும் தண்ணீரின் அளவுக்கேற்ப ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதில் மீதம் உள்ள தண்ணீர் கலவையில் இலகுவான தன்மையை ஏற்படுத்தி பணிகளை எளிதாக செய்ய உதவுகிறது. அதன் அடிப்படையில், கலவையில் குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக சேர்க்கப்படும் தண்ணீர் கான்கிரீட்டின் உறுதியைக் குறைத்து விடுவதாக வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தரமான கான்கிரீட்டை உருவாக்க அதில் சேர்க்கப்படும் தண்ணீரின் தரம் மற்றும் அளவு ஆகியவை அவசியமானது. சிமெண்டு மற்றும் தண்ணீர் ஆகிய ரசாயனப் பொருட்கள் ஒன்றாக சேர்க்கப்படுவதால் சிமெண்டு பசை (Ce-m-ent Gel) உருவாகிறது. அதில் ஜல்லி மற்றும் மணலைச் சேர்ப்பதால் கான்கிரீட் உருவாகிறது. கட்டுமானப் பணிகளை எளிதாக செய்யும் வகையில் கூடுதலாக சேர்க்கப்பட்ட தண்ணீர் கான்கிரீட்டின் உட்புறத்தில் இருக்கும். அது மேற்பூச்சு செய்யப்பட்ட சுவருக்குள் இருந்தாலும் படிப்படியாக வெறியேறி விடும்.
அந்த நிலையில் வெளியேறும் தண்ணீருக்கேற்ப கான்கிரீட்டில் மெல்லிய துளைகள் (Po-res) உருவாகும். அதற்குள் ஈரக்காற்று புகுந்து கம்பிகளில் துருப்பிடிக்க வைக்கும். இதனால் கட்டிடத்தின் நிலைப்புத் தன்மை (dur-a-b-i-l-ity) பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும், குடிப்பதற்கு பயன்படுத்தும் நீர், கான்கிரீட் கலவை உருவாக்க சிறந்தது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் அது கான்கிரீட்டை பாதிக்கும் தன்மை கொண்டதாகும்.
Related Tags :
Next Story