உங்கள் முகவரி

காலத்திற்கேற்ற நவீன கான்கிரீட் கற்கள் + "||" + Modern concrete stones suitable for the period

காலத்திற்கேற்ற நவீன கான்கிரீட் கற்கள்

காலத்திற்கேற்ற நவீன கான்கிரீட் கற்கள்
கட்டுமானப் பணிகளில் சமீப காலங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன அறிமுகமான ஏ.ஏ.சி பிளாக்குகள் (Autoclaved Aerated Concrete is blocks) பற்றி அதன் தயாரிப் பாளர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.
* இவ்வகை கற்களை பயன்படுத்துவதன் மூலம் இரும்பு, சிமெண்டு மற்றும் பணியாளர் செலவு ஆகியவற்றில் 30 சதவிகிதம் சேமிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது.

* குறைந்த எடை காரணமாக கட்டுமான அமைப்புகளின் மொத்த எடையில் 60 சதவிகிதம் வரை குறைவதாக சொல்லப்படுகிறது.

* ஏ.ஏ.சி பிளாக்குகள் தயாரிப்பில் குறைந்த அளவில் வெப்பக் கடத்தல் ஏற்படுவதால், அவற்றைக் குளிர்விக்கும் செலவும் 20 சதவிகிதம் வரை குறைகிறது.

* பெரிய அளவு மற்றும் குறைந்த எடை ஆகியவை காரணமாக எளிதாக பயன்படுத்த இயலும். அதனால் பணியாளர் உற்பத்தித் திறன் அதிகரித்து, கட்டுமானப் பணிகளுக்கான நேரமும் குறைகிறது.