ரியல் எஸ்டேட் சந்தையில் உருவாகும் மாற்றங்கள்


ரியல் எஸ்டேட் சந்தையில் உருவாகும் மாற்றங்கள்
x
தினத்தந்தி 25 Jan 2020 9:46 AM GMT (Updated: 25 Jan 2020 9:46 AM GMT)

இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் குறித்து தேசிய ரியல் எஸ்டேட் டெவலப்மெண்டு வர்த்தக கூட்டமைப்பின் (National Real Estate Development Council NAREDCO) தலைவரான நிரஞ்சன் ஹீராநந்தானி அளிக்கும் தகவல்களை இங்கே காணலாம்.

* வீடு அல்லது அடுக்குமாடிகளில் குடியிருப்புகள் வாங்குவது என்பது மக்களுடைய தேவைகளின் அடிப்படையில் அமையும். குறிப்பாக, நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்கள் காரணமாக, கம்யூனிட்டி அடிப்படையில் அனைத்து விதமான உள் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட குடியிருப்பு திட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய வகை வீடுகளின் தேவை அதிகரிக்கும்.

* குறிப்பிட்ட காலத்துக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து வசிக்கும் ‘கோ லிவிங் ஸ்டைல்’ வீடுகளின் எண்ணிக்கை கூடுதலாகும்.

* கட்டுமான பணிகளில் அதிநவீன தொழில்நுட்ப அணுகுமுறைகள் தற்போது கடைபிடிக்கப்படுகின்றன. அதன் காரணமாக, கடந்த ஆண்டுகளை விடவும் கட்டுமான திட்ட பணிகளை முடித்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்க ஆகும் கால அவகாசம் பெருமளவுக்கு குறைந்து விடும்.

* அலுவலக பணிகளை வீடுகளில் செய்யும் ‘வொர்க் அட் ஹோம்’ நடைமுறை தற்போது பெருகி வருகிறது. அதன் காரணமாக, பணியிடங்களுக்கு அருகில் குடியிருப்புகளை தேர்வு செய்யும் அவசியம் ஏற்படாது. அதனால், புறநகர் பகுதிகளில் வீடுகள் வாங்குவது அதிகமாகும்.

* ‘ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் (REIT) , ‘இன்ப்ரா ஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட்’ (InvITs) மற்றும் ‘ரியல் எஸ்டேட் மியூச்சுவல் பண்ட்’ ஆகியவை அளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளின் அடிப்படையில், பலரும் குறு முதலீடுகளை செய்வதற்கான சூழல் அமைந்துள்ளது.



Next Story