உங்கள் முகவரி

நிலத்தின் அனைத்து தகவல்களையும் அறிய உதவும் அரசு பதிவேடுகள் + "||" + Of the land Helps to know all the information Government records

நிலத்தின் அனைத்து தகவல்களையும் அறிய உதவும் அரசு பதிவேடுகள்

நிலத்தின் அனைத்து தகவல்களையும் அறிய உதவும் அரசு பதிவேடுகள்
நிலம் என்பது பாதுகாப்பான நிரந்தர முதலீடு என்ற பொருளாதார அடிப்படையில் வீட்டு மனைகள் உள்ளிட்ட இதர நில வகைகளின் மதிப்பு மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, நகர்ப்புறம் மற்றும் புற நகர்ப்பகுதிகள் ஆகியவற்றில் அமைந்துள்ள வீட்டு மனைகள் உள்ளிட்ட நில வகைகளை வீடு கட்டவோ அல்லது முதலீட்டு நோக்கிலோ வாங்க திட்டமிடுபவர்கள் அவற்றின் பட்டா பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட பின்னரே தக்க முடிவெடுப்பதுதான் முதலீட்டுக்கு பாதுகாப்பானது.

குறிப்பிட்ட ஒரு மனை அல்லது இடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும். குறிப்பிட்ட மனை அல்லது இடம் யாருக்கு பாத்தியப்பட்டது என்பதை அறிந்து கொள்ள அங்கு உள்ள பதிவேடுகள் பயன்படுகின்றன. மேலும், இடம் பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளவேண்டிய நிலையில் வட்ட (Bl-o-ck) அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் பயன்படுகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய பதிவேடுகளின் மூலம் நிலம் பற்றிய கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

A- பதிவேடு : கிராம கணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட வட்டம் ஆகிய இரு நிலைகளில் பராமரிக்கப்படும். இந்த பதிவேட்டில் புல எண், உட்பிரிவு மாற்றம், நிலம் ஒப்படைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். (இது கிராமக் கணக்கில் இருக்கும்)

B-பதிவேடு : பழைய கால எஸ்டேட் இனாம் நிலங்கள் மற்றும் 1963-ம் ஆண்டுக்கு முன்பாக கிராமக் கணக்கில் உள்ள நிலங்கள் பற்றி இந்தப்பதிவேடு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

B -1 பதிவேடு : இந்த பதிவேட்டில் தர்ம காரியங்கள் சம்பந்தமாகவும், கோவில்கள் மற்றும் இதர வழிபாட்டு தலங்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் பற்றிய தகவல்களும், அறக்கட்டளை மற்றும் கிராம நலன் பொருட்டு அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றியும் தகவல்கள் பதியப்பட்டிருக்கும்.

C-பதிவேடு : அரசின் குத்தகை நிலங்கள் பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

D-பதிவேடு : பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் இந்த பதிவேட்டில் இருக்கும்.

F-பதிவேடு : அரசின் ஒரு துறையிலிருந்து, மற்றொரு துறைக்கு நில உரிமை மாற்றம் செய்தது பற்றிய தகவல்கள் இந்த பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

G - பதிவேடு : வாரிசுதாரர்கள் இல்லாததால் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலங்களின் விவரங்கள் இந்தப் பதிவேட்டில் பராமரிக்கப்படும்.

மேற்கண்டவை தவிர இன்னும் பல உட்பிரிவுகளில் பதிவேடுகள் வட்ட அளவில் அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.