அறைக்கு அழகூட்டும் ரெடிமேடு மர தடுப்புகள்


அறைக்கு அழகூட்டும் ரெடிமேடு மர தடுப்புகள்
x
தினத்தந்தி 7 Aug 2021 12:41 AM GMT (Updated: 7 Aug 2021 12:41 AM GMT)

ர் அறையை வெவ்வேறு உபயோகத்துக்காக பயன்படுத்த மூங்கில் அல்லது கார்டுபோர்டு தட்டிகள் தடுப்பாக பயன்படுத்தப்பட்டன.

வீட்டில் உள்ள ஹால் பெரியதாகவும், வெளிச்சமும், காற்றோட்ட வசதியும் கொண்டதாக இருக்குமானால், ஒரு தடுப்பு வைத்து அதன் ஒரு பகுதியை தனிப்பட்ட மறைவிடமாக மாற்றலாம். ஓர் அறையை வெவ்வேறு உபயோகத்துக்காக பயன்படுத்த மூங்கில் அல்லது கார்டுபோர்டு தட்டிகள் தடுப்பாக பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ரெடிமேடு மர தட்டிகளாக கிடைக்கின்றன.

அவற்றில் 4 அடுக்கு, 6 அடுக்கு மடிப்புகள் கொண்டதாக, பல டிசைன்களில் கிடைக்கின்றன. இட வசதி மற்றும் அமைக்கப்படும் பகுதியை பொறுத்து அவற்றை தேர்வு செய்யலாம். அறைக்கு அழகு சேர்ப்பவையாக இருப்பதால், ரூம் டிவைடர் போன்று அவை தோற்றமளிப்பதில்லை. தேவைக்கேற்ப அவற்றை பயன்படுத்தி விட்டு, மற்ற சமயங்களில் மடக்கி ஓரமாக வைத்து விடலாம். அதன் இடையிடையே பூக்கொத்துகள், கொடிகள் ஆகியவற்றையும் அழகிய ஓவியங்களையும் தொங்க விடலாம்.


Next Story