வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு என்ன வண்ணங்கள் பூசலாம்?
எப்பொழுதுமே வீட்டின் உட்புற வடிவமைப்புகளில் அதிக கவனம் செலுத்துவது போல் வீட்டின் வெளிப்புறத்தில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை..
பார்வையாளர்களுக்கு நம்முடைய தனித்துவம்மற்றும் நம்முடைய ஆளுமை பற்றிய முதல் அபிப்ராயத்தை அளிப்பது வீட்டின் வெளிப்புற தோற்றம் தான் என்பதை நாம் அறிவதில்லை..நம்முடைய தட்பவெப்பம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சு நிறத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பதை பார்ப்போம்.
சேர்க்கை
வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சு வண்ணங்களை பொறுத்தவரை இரண்டு,மூன்று வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசும் பொழுது அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருக்கும்..ஒரே வண்ணத்தை வெளிப்புறம் முழுவதும் பூசும் பொழுது அது கவர்ச்சியான தோற்றத்தை தராது என்பதால் இரண்டுக்கு மேற்பட்ட வண்ணங்களை சேர்த்து கலந்து பூசுவது சிறந்தது..அதேபோல் ஒரு வண்ணத்தின் பல ஷேட்களை சுவற்றிற்கு பூசும் பொழுது அவை உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.
*. வண்ணங்களின் தேர்வு:
கருப்பு மற்றும் பிற அடர் வண்ணங்களை வெளிப்புற வண்ணப்பூச்சாக பூசுவதை தவிர்ப்பது சிறந்த யோசனையாகும்.. இந்த நிறங்கள் தூசி மற்றும் அழுக்குகளை உள்வாங்கி, உங்கள் வெளிப்புற சுவர் வண்ணத்தை அடிக்கடி மீண்டும் பூச வைக்கும்.இருப்பினும், அடர் நிறத்தின் வெளிர் ஷேடையும் மற்றொரு மென்மையான வண்ணத்தையும் கலந்து வெளிப்புறச் சுவற்றிற்கு வண்ணம் தீட்டலாம்..அடர் நிறங்கள் வீட்டிற்கு கண்ணியமான தோற்றத்தை தருவதால், வீட்டின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்த அடர் வண்ணங்களை பயன்படுத்தலாம்.
*ஆயுள்:
வெளிப்புறச் சுவற்றிற்கு பூசப்படும் வண்ணம் என்பது அதன் நிறத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் நீடித்த தன்மையை தருவதாகவும் இருப்பதாக பார்த்து அவற்றை தீர்மானிப்பது சிறந்தது..அதிக பளபளப்புடன் இருக்கும் கிளாஸ் பெயிண்ட் நீடித்து உழைப்பதால் அவற்றை தேர்ந்தெடுக்கலாம்.. அதேபோல் சரியான வெளிப்புற சுவர் பெயிண்ட் ஃபினிஷிற்கு ஷேட்டின் மற்றும் முட்டை ஓடுகளை பயன்படுத்தும்பொழுது அவை சிறந்த தோற்றத்துடன் சுத்தம் செய்வதும் எளிதாக உள்ளது.இதுபோன்ற ஃபினிஷிங் உங்களுடைய வெளிப்புற வண்ணப்பூச்சு யோசனைகளை மேம்படுத்துகின்றன.
* இயற்கையின் விளைவு:
உங்கள் வெளிப்புறச் சுவர்களுக்கு நீங்கள் எந்த நிறம் மற்றும் அலங்காரத்தை பயன்படுத்தினாலும், அது உங்கள் சுற்றுப்புறத்துடன் இணைந்தால் மட்டுமே அழகாக இருக்கும்.குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும், கடலுக்கு அருகிலும் வசிப்பவர்கள் தங்கள் வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சுகளை அவர்களின் சுற்றுப்புறம், பின்னணி மற்றும் காலநிலைக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குளிர்ந்த வண்ணங்களை தேர்ந்தெடுத்து பூசுவது அங்கிருக்கும் காலநிலை மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பசுமைக்கு ஏற்றதாக இருக்கும்.. அதேபோல் கடற்கரைக்கு அருகில் வீடுகள் இருப்பவர்கள் வெளிப்புறச் சுவற்றிற்கு உப்பு அரிக்காத தன்மைகொண்ட வண்ணங்களை பூசுவது சிறந்த யோசனையாக இருக்கும்.
*ஈர்ப்பு:
பார்வையாளர்கள் நம் வீட்டின் வெளிப்புறத்தை முதலில் பார்க்கும் பொழுது அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வெளிப்புற வண்ணம் இருக்க வேண்டும்.. எனவே, பிரகாசமான வண்ணங்களை வெளிப்புறச் சுவற்றிற்கு பூசும்பொழுது அது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்.எனவே, பளிச்சென்றும்,பிரகாசமாகவும் இருக்கும் வண்ணங்களை தேர்ந்தெடுத்து வெளிப்புற சுவற்றிற்கு வண்ணப்பூச்சாக பூசலாம்.இது போன்ற வண்ணங்கள் தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கும் பளிச்சென்று நம் வீட்டை அடையாளப்படுத்தும்.
*கருக்களத்தை உருவாக்கவும்:
உங்களுடைய வெளிப்புற சுவரில் என்ன வேண்டும் என்பது பற்றிய தெளிவான யோசனை எப்போதும் உங்களுக்கு உதவியாக இருக்கும்..உங்கள் மனதில் ஒரு நிலையான கருவானது உங்கள் வெளிப்புறத்தை சுற்றி வண்ணப்பூச்சு பூசம் பொழுது சில தனித்துவமான வண்ணப்பூச்சு வண்ண யோசனைகளை கொண்டுவரும்..இதுபோன்று தனித்துவமான கருவை வெளிப்புற சுவற்றில் வண்ணமாக தீட்டும் பொழுது அது ஒரு அதிசயமான தோற்றத்தை உருவாக்கும்..
*வெளிப்புற அலங்காரம் :
உட்புற அலங்காரத்தைப் போலவே, வெளிப்புற வண்ணப்பூச்சு நிறங்களும் சில அலங்காரங்களுடன் மேம்படுத்தப்பட வேண்டும்..வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சுகள் கதவைத் தவிர வேறு சில அலங்காரங்களுடன் அலங்கரிக்கப்பட்டால் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் ஃபர்னிச்சர்கள் வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சு வண்ணங்களின் வண்ண கருப்பொருளுடன் பொருந்த வேண்டும்.
*பெயிண்டிங் சீஸன்:
வெளிப்புற வண்ணப்பூச்சுகள் சில குறிப்பிட்ட பருவங்களில் பூசப்பட்டால் அவை நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.தரம், வகை மற்றும் நிறம் ஆகியவற்றுடன் வெளிப்புற சுவர் வண்ணப்பூச்சுகளுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை தாங்கும் வர்ணமானது பூசப்பட வேண்டும்..வெளிப்புற வண்ணப்பூச்சுகளை பூசுவதற்கு கோடைக் காலமே சிறந்ததாகும். ஏனெனில், வண்ணப்பூச்சானது சரியாக உலரப் போதுமான வெப்பநிலை கோடை காலத்திலேயே இருக்கும்.
இன்னும் சில பபெயிண்ட்டுகள் வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் பூசுவதற்கு ஏற்றது போலவும், விரிசல்கள் ஏற்படுவதை தடுப்பது போலவும்,கரைகள் படிவதைத் தடுப்பது போலவும் வந்துள்ளன..இதுமட்டுமல்லாமல் அதிக மழை பொழியும் பகுதிகளில் தண்ணீர் சுவற்றில் உட்புறம் ஊடுருவாத , சுவற்றில் மேற்புறம் பாசிகள் படிவதை தவிர்ப்பது போல பெயிண்ட்கள் வந்துள்ளன.
Related Tags :
Next Story