கட்டுமான தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்


கட்டுமான தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
x

கட்டுமான தளத்தில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

ட்டுமான தளத்தில் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத வகையில் விபத்துகள் நிகழ்வதுண்டு.பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் பொழுது பெரிய விபத்துகள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டுமான தளத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியமானதாகும்.

கட்டுமான தளத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது பணியிடத்தை பாதுகாப்பானதாகவும், விபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கையாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும்.இது ஒரு கட்டுமான தளத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, முடிக்கப்பட்ட கட்டுமானத்தின் தேவையான பாதுகாப்பு தரங்களை பூர்த்திசெய்கிறது.

உயரமான இடத்திலிருந்து விழுவதால் ஏற்படும் விபத்துக்கள். ஏதாவது சரிந்து அல்லது கவிழ்ந்து சிக்கிக் கொள்வதால் ஏற்படும் விபத்துக்கள். ஓடும் வாகனத்தால் ஏற்படும் விபத்துக்கள். மின்சாரம் அல்லது மின் வெளியேற்றத்துடன் தொடர்பு கொள்வதால் ஏற்படுவது. பொருட்களை இயந்திரம் தூக்கும் போது தவறி விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துகள்.

நகரும் இயந்திரங்கள் அல்லது பொருட்களை தயாரிக்கும் எந்திரங்களை தொடர்பு கொள்வதால் ஏற்படும் விபத்துகள். வெப்பமான அல்லது தீங்கு விளைவிக்கும் பொருளின் வெளிப்பாடு காரணமாக ஏற்படும் விபத்துகள்.

தளத்தில் பாதுகாப்பான அணுகுமுறை :

அனைவரும் தங்கள் பணியிடத்திற்கு பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்துவது. எப்பொழுதும் பணியாளர்கள் கீழே விழக்கூடிய விளிம்புகளில் இரட்டை பாதுகாப்பு தடுப்புகள் அல்லது பிற பொருத்தமான விளிம்பு பாதுகாப்பு வழங்கப்படுவது. கட்டுமானத் தளத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் போது கட்டுமான தளத்தில் எப்போதும் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளைப் பொருத்தவேண்டும். கட்டுமானத் தளங்களில் பொது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தளத்தைச் சுற்றி வேலி அமைப்பது.

பொதுவாக கட்டுமான தளங்களில் தரைகளில் உள்ள ஓட்டைகள், வேலை செய்யும் தளங்களில் உள்ள இடைவெளிகள் மற்றும் படிக்கட்டுகள் போதுமான அளவு மூடப்படாத தடுப்பு வேலிகளால் உயரத்திலிருந்து விழுகின்ற ஆபத்து நிகழ்கின்றன. சரியான பொருத்தம் இல்லாத சாரக்கட்டு அல்லது ஏணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முழுமையற்ற சாரக்கட்டு வேலைகளை ஒருபோதும் தொடங்க வேண்டாம்.

எல்லா விளிம்புகளிலும் கைப்பிடிகள் மற்றும் கால் பலகைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். எப்போதும் நல்ல தரமான ஹெல்மெட்டைப் பயன்படுத்த வேண்டும். உயரத்தில் வேலையைத் தொடங்குவதற்கு முன், எப்போதும் மின் பரிமாற்ற லைன் அனுமதியை சரிபார்க்கவும்.



Next Story