அலுவலக வளாகத்தில் செடிகள் அலங்கரிப்பு


அலுவலக வளாகத்தில் செடிகள் அலங்கரிப்பு
x

அலுவலகத்தில் பகல் முழுவதும் அதிகபட்ச நேரம் பணிபுரிகிறோம். அந்த சூழலில் செடிகள் நம்மை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தால், இதமான சூழலை உருவாக்கும், குளிர்ச்சி பரவும், காற்றோட்டமான சூழல் இருக்கும், மன அழுத்தம் குறையும். சிலர் வாஸ்துக்காகவும் தாவரங்களை வளர்க்கிறார்கள். அலுவலகத்தின் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள்.

தண்ணீர் அளவாக தேவைப்படும் தாவரங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. பராமரிப்புகள் அதிகமாக இல்லாத செடிகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும். செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக பச்சை பசேல் என தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. அலுவலகத்தில் பலவகையான செடிகள் அலங்கரிக்கப்படுகின்றன.

தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதால் பணிபுரிபவர்களுக்கு இதமான சூழல் நிலவுகிறது. மனஉளைச்சல் மனஅழுத்தம் பதட்டங்கள் குறைய இது இலகுவாக இருக்கிறது. குரோட்டன்ஸ், மணி பிளான்ட், கற்றாழை மற்றும் ரோஜா செடிகள் வளர்க்கப்படுகின்றன .

அலுவலகத்தில் பலவகைகளில் செடிகள் அலங்கரிக்கப்படுகின்றன.

1. தொங்கும்தாவரங்கள்:- இதுபோன்ற தொங்கும் செடிகள் சுவரின் மேற்கூரிலிருந்து தொங்க விடப்படுவதால் தரையில் இடத்தை அடைப்பது இல்லை .சிறு அலுவலகங்களில் இடத்தட்டுப்பாடு இல்லாமல் இது மாதிரி தொங்கும் செடிகளை பயன்படுத்தலாம்.

2.பானை தாவரங்கள்:- மணி பிளான்ட் போன்ற படரும் செடிகள் பானைகளில் வைத்து அங்கீகரிக்கப்படுகிறது. மேஜைமீதும், செல்ஃப் மீதும் இவ்வகை செடிகள் வளர்க்கப்படுகின்றன. அலுவலகத்தின் அழகை மேன்மைபடுத்தி காட்டும் .

3. சதைப்பற்றுள்ள தாவரங்கள்:- கற்றாழை போன்ற தாவரங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். இந்த வகையான செடிகள் வளர்வதற்கு குறைந்தபட்ச சூரிய ஒளி இருந்தாலே போதும் அலுவலகத்திற்கு அழகு ஊட்டுவதாகவும் இருக்கும்.

4.பால்கனி தாவரங்கள்:- அலுவலகத்தில் பால்கனி இருந்தால் காக்டஸ் மணி பிளான்ட், ரோஜா செடிகள், சிலந்தி செடிகள், படரும் செடிகள் இவைகளை அமைக்கலாம்.

5. மினியேச்சர் தாவரங்கள்:- இது இயற்கையை அலுவலகத்துக்குள் கொண்டுவரும் ஒரு அமைப்பாகும். அலுவலகத்தை அழகு படுத்துவதுடன் அங்கு பணிபுரிபவர்களுக்கு இயற்கையான சூழலில் வேலை பார்க்கும் ஒரு அமைப்பை உருவாக்கி கொடுக்கிறது. அங்கு பணிபுரிபவர்களுக்கு ஒரு குழுவாக வேலைபார்க்கும் மனப்பான்மையையும் உருவாக்கி கொடுக்கிறது.

6. சுவர் தாவரங்கள் :- இன்றைய காலங்களில் இவ்வகையான தாவரங்கள் அலுவலகங்களில் அதிகமாக அலங்கரிக்கப்படுகிறது. ஒரு பசுமையான சூழலை உருவாக்குகிறது. தடுப்புச் சுவர் வைப்பதற்கு பதிலாக இவ்வகையான சுவர் தாவரங்கள் அமைக்கப்படுகிறது. அலுவலகத்தில் பசுமையை விரிப்பதுடன் தனித்தனியே அறைகளாக அலுவலகத்தை பிரிப்பதற்கு இவ்வகையான சுவர் தாவரங்கள் உபயோகப்படுகிறது.

7. உட்புற நீர் அம்சங்கள்:- அலுவலக உட்புறத்தில் நீர் வீழ்ச்சி மற்றும் ஃபவுண்டைன் போன்ற அமைப்புகள் குளிர்ச்சியை பரப்புகிறது. பணிபுரியவர்களுக்கு நேர்மறை ஆற்றலையும் ஒரு புத்துணர்ச்சியும் வழங்குகிறது. குளிர்ச்சியையும் தருகிறது.

8. மேஜை தாவரங்கள்:- இவ்வகை தாவரங்கள் பசுமையை தெளிப்பதாக உள்ளது. கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் அமைகிறது. பணி புரிபவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது. காற்றின் தன்மையை தூய்மைப்படுத்துகிறது. மூலிகை தாவரமாக இருந்தால் மிகவும் சிறப்பு.

அலுவலகத்தில் வாஸ்துக்காகவும் ஒரு நேர்மறை ஆற்றலை பணிபுரிபவர்களுக்கும் அலுவலகத்துக்கு வருபவர்களுக்கும் வழங்குவதற்காகவும் இது போன்ற முறைகள் இன்றைய காலகட்டங்களில் கடைப்பிடிக்கிறார்கள். இது சிறு மற்றும் பெரிய அலுவலகங்களை பொறுத்து இந்த பராமரிப்பு முறைகள் பின்பற்றப்படுகிறது.


Next Story