தேசிய கைப்பந்து போட்டி: இந்தியன் ரெயில்வே, கேரளா சாம்பியன் தமிழக அணிக்கு வெண்கலம்


தேசிய கைப்பந்து போட்டி: இந்தியன் ரெயில்வே, கேரளா சாம்பியன் தமிழக அணிக்கு வெண்கலம்
x
தினத்தந்தி 31 Dec 2016 2:30 AM IST (Updated: 31 Dec 2016 2:02 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கைப்பந்து போட்டி: இந்தியன் ரெயில்வே, கேரளா சாம்பியன் தமிழக அணிக்கு வெண்கலம்

சென்னை,

65-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 25-17, 20-25, 26-24, 27-25, 15-9 என்ற செட் கணக்கில் இந்தியன் ரெயில்வேவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத கேரள அணி இந்த பட்டத்தை வெல்வது இது 6-வது முறையாகும். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி 20-25, 25-20, 34-32, 25-21 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பை விரட்டியடித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

இதே போல் பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 25-21, 21-25, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் கேரளாவை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கியது. இந்தியன் ரெயில்வே அணி 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 9-வது முறையாக மகுடம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சிவந்தி, ஜேப்பியார் கோப்பைகளை இந்திய கைப்பந்து சம்மேளன செயலாளர் ராம்அவ்தார் ஜஹார், போட்டி அமைப்பு குழு சேர்மன் ரெஜினா முர்லி ஆகியோர் வழங்கினர். 

Next Story