தேசிய கூடைப்பந்து போட்டிகள்: தமிழ்நாடு–புதுச்சேரி அணிகள் வெற்றி


தேசிய கூடைப்பந்து போட்டிகள்: தமிழ்நாடு–புதுச்சேரி அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 9 Jan 2017 10:15 PM GMT (Updated: 9 Jan 2017 9:39 PM GMT)

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணியும், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணியும் வெற்றி பெற்றன. தேசிய கூடைப்பந்து போட்டி புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் புதுவை மாநில

புதுச்சேரி,

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழக அணியும், ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணியும் வெற்றி பெற்றன.

தேசிய கூடைப்பந்து போட்டி

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் உள்ள ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் புதுவை மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீனியர் தேசிய கூடைப்பந்து போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. 14–ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

3–வது நாளான நேற்று, பெண்கள் ‘ஏ’ பிரிவில் ரெயில்வே–சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் 71–68 என்ற புள்ளிக் கணக்கில் ரெயில்வே அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் தெலுங்கானா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் 71–43 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கான அணி வெற்றிபெற்றது. ‘பி’ பிரிவில் கேரளா–டெல்லி அணிகள் மோதின. இதில் 80–44 என்ற புள்ளிக் கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் தமிழக அணி மேற்கு வங்காள அணியை 74–23 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

‘சி’ பிரிவில் அரியானா–உத்தரகாண்ட் அணிகள் மோதின. இதில் 47–10 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்றது. “டி“ பிரிவில் உத்தரப்பிரதேச அணியை கோவா அணியை 49–8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

ஆண்கள் பிரிவு

ஆண்கள் ‘ஏ’ பிரிவில் கர்நாடகா–அரியானா அணிகள் மோதின. இதில் 76–73 என்ற புள்ளிக் கணக்கில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் ரெயில்வே–சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் 64–53 என்ற புள்ளிக் கணக்கில் ரெயில்வே அணி வெற்றி பெற்றது. ‘சி’ பிரிவில் சண்டிகர்–சிக்கிம் அணிகள் மோதின. இதில் 77–18 என்ற புள்ளிக் கணக்கில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது. தெலுங்கானா–பீகார் அணிகள் மோதிய போட்டியில் 65–39 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கானா அணி வெற்றி பெற்றது.

டெல்லி–கோவா அணிகள் மோதிய போட்டியில் 63–31 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ‘டி’ பிரிவில் இமாச்சலபிரதேசம்–திரிபுரா அணிகள் மோதின. இதில் 56–34 என்ற புள்ளிக் கணக்கில் இமாச்சல பிரதேசம் அணி வெற்றி பெற்றது. புதுச்சேரி அணி இமாச்சலப் பிரதேச அணியை 68–47 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

போட்டிகள் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.Next Story