கூடைப்பந்து

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது + "||" + Summer volleyball training camp

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 26-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் 35-வது கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 26-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலையில் 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும் இந்த முகாமில், முன்னாள் சர்வதேச, தேசிய கைப்பந்து வீரர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். இந்த இலவச பயிற்சி முகாமில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் ஆவர். இதில் பங்கேற்பவர்களுக்கு தினசரி பால் அளிக்கப்படுவதுடன், கடைசி நாளில் டி-சர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.