சென்னையில் கூடைப்பந்து பயிற்சி முகாம்


சென்னையில் கூடைப்பந்து பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 27 April 2017 1:45 AM IST (Updated: 27 April 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் மே 1–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. தினசரி மாலை 4 முதல் 6.30 மணி வரை பயிற்சி நடைபெறும். 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ–மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் தெரிவித்துள்ளார்.


Next Story