கூடைப்பந்து

கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் வீழ்ந்தது + "||" + BRICS Games 2017 in Guangzhou, China.

கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் வீழ்ந்தது

கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் வீழ்ந்தது
முதல் நாள் நடைபெற்ற கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை சந்தித்தது
புதுடெல்லி


இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்ரிக்கா நாடுகள் பங்குபெறும் பிரிக்ஸ் விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சோ நகரில் நேற்று தொடங்கியது.

முதல் நாள் நடைபெற்ற கூடைபந்து போட்டியில் இந்தியா சீனாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் சீனா 38-28 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சீனா மூன்றாம் மற்றும் நான்காம் சுற்றில் மொத்தமாக 97  புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவில் இந்தியாவை 57-97 என்ற புள்ளி கணக்கில் சீனா வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அம்ஜியோத் சிங் கில் 26 புள்ளிகளை எடுத்தார்.