கூடைப்பந்து

43 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + 43 teams will participate State basketball competition Start in Chennai today

43 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

43 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி
சென்னையில் இன்று தொடக்கம்
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 15-வது மாநில கூடைப்பந்து போட்டி
சென்னை,

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 15-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் போலீஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஐ.சி.எப்., சுங்க இலாகா, ஸ்டேட் வங்கி உள்பட 34 அணிகள் கலந்து கொள்கின்றன. பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ராகவேந்திரா, இந்துஸ்தான் உள்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. நாளை மாலை நடைபெறும் தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி.கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.