தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழக அணிகள் வெற்றி


தேசிய கூடைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழக அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 18 Jan 2018 2:30 AM IST (Updated: 18 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

சென்னை,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. லெவல்-1, லெவல்-2 என்ற அடிப்படையில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லெவல்-1 பிரிவில் கடந்த தேசிய போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் இடம் பெற்றுள்ளன. லெவல்-2 பிரிவில் பின்தங்கிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 113-58 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் பஞ்சாப் அணி 76-65 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தையும், உத்தரகாண்ட் அணி 85-62 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும் தோற்கடித்தன.

பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் அணி 89-61 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 89-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை சாய்த்தது. தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 68-48 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தியது.

Next Story