தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றி
தேசிய கூடைப்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக ஆண்கள் அணி 4-வது வெற்றியை ருசித்தது.
சென்னை,

தமிழக அணி 4-வது வெற்றி
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அரைஸ் ஸ்டீல் நிறுவனம் ஆதரவுடன் 68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 31 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்றுள்ளன.
4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 95-85 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தியது. ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட தமிழக அணிக்கு கிட்டிய 4-வது வெற்றி இதுவாகும். தமிழக அணியில் அதிகபட்சமாக அரவிந்த் 23 புள்ளிகள் குவித்தார். நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட் 85-45 என்ற புள்ளி கணக்கில் கேரளாவை நொறுக்கியது. மற்ற ஆட்டங்களில் மத்தியபிரதேச அணி 77-65 என்ற புள்ளி கணக்கில் பீகாரையும், சர்வீசஸ் அணி 85-46 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்காரையும், கர்நாடகம் 78-40 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும், பஞ்சாப் 101-57 என்ற புள்ளி கணக்கில் அரியானாவையும் தோற்கடித்தன.
கேரளா அபாரம்
பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரள அணி 69-53 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணியை வீழ்த்தியது. கேரள அணியில் ஜீனா 17 புள்ளியும், தமிழக அணியில் ஸ்ரீவித்யா 16 புள்ளியும் சேகரித்தனர். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். மற்ற ஆட்டங்களில் சத்தீஷ்கார் அணி 85-69 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தையும், இந்தியன் ரெயில்வே அணி 105-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவையும், மராட்டிய அணி 82-71 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானையும் சாய்த்தன.

Related Tags :
Next Story