கூடைப்பந்து

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக பெண்கள் அணி மீண்டும் தோல்வி + "||" + National Basketball Tournament: Tamil women's team Failed again

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக பெண்கள் அணி மீண்டும் தோல்வி

தேசிய கூடைப்பந்து போட்டி:
தமிழக பெண்கள் அணி மீண்டும் தோல்வி
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
சென்னை,

68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. 5-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 67-83 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது. தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். தமிழக பெண்கள் அணி அடுத்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இருக்கிறது.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் உத்தரகாண்ட் அணி 77-55 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானையும், கேரள அணி 84-66 என்ற புள்ளி கணக்கில் ஒடிசாவையும், இந்தியன் ரெயில்வே 88-81 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பையும் தோற்கடித்தன.

நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. தமிழக ஆண்கள் அணி கால்இறுதியில் கேரளா அல்லது சர்வீசஸ் அல்லது சத்தீஷ்கார் ஆகிய அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.