கூடைப்பந்து

தேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி + "||" + National Basketball Tournament: Tamil Nadu Men's Team in Final

தேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி

தேசிய கூடைப்பந்து போட்டி: இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி
68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
சென்னை,

ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 90-72 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது. தமிழக அணியில் அசத்திய அரவிந்த் 24 புள்ளிகள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.


மற்றொரு ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 93-65 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை விரட்டியது. இன்று நடக்கும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகம்-சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே அணி 76-63 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் கேரளாவையும், சத்தீஷ்கார் அணி 79-78 என்ற புள்ளி கணக்கில் கர்நாடகாவை மயிரிழையில் வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் ரெயில்வே- சத்தீஷ்கார் அணிகள் மோதுகின்றன.