கூடைப்பந்து

ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி + "||" + Asian Games Basketball Tournament Indian women's team failed

ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது.

ஜகர்தா, 

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு முன்பே சில போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஜகர்தாவில் நேற்று நடந்த கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 61-79 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

இதே போல் ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் (டி பிரிவு) இந்திய அணி 29-40 என்ற புள்ளி கணக்கில் ஈராக்கிடம் வீழ்ந்தது.