ஆசிய கிளப் கைப்பந்து போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி


ஆசிய கிளப் கைப்பந்து போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 25 April 2019 1:34 AM IST (Updated: 25 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது.

சீனதைபே, 

ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சென்னை ஸ்பார்டன்ஸ் (இந்தியா) அணி, வியட்நாம் கிளப் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 25-21, 25-18, 25-21 என்ற நேர்செட்டில் வியட்நாம் கிளப் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, ஈரான் கிளப் அணியை எதிர்கொள்கிறது.

Next Story