மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது அதனை குணப்படுத்தும் வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி


மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது  அதனை குணப்படுத்தும்  வெற்றிவாய்ப்பை எளிதாக்கும் - டாக்டர் யோகஷாலினி
x
தினத்தந்தி 16 Oct 2021 11:44 AM GMT (Updated: 18 Oct 2021 7:33 AM GMT)

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

மார்பக புற்றுநோய் இந்தியாவில் பெண்களுக்கு வரும் புற்றுநோயில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மார்பக புற்றுநோய் பற்றிய சரியான புரிதல் இல்லாமை மற்றும் தேவையற்ற தயக்கங்களால் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகின்றனர். கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய் காலத்தில் மார்பக பிரச்சினைகளுக்காக மக்கள் மருத்துவரை நாடுவதும் மிகவும் குறைந்துள்ளது.

பெண்கள் அனைவரும் வருடத்திற்க்கு ஒருமுறை உரிய மருத்துவரிடம் மார்பக பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். மேலும் மாதம் ஒருமுறை மாதவிடாய் நாட்களுக்கு பின்பு மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

மார்பக புற்றுநோய் அறிகுறிகளை முன்னரே கண்டறிவது  அதனை குணப்படுத்துவதற்கான வெற்றிவாய்ப்பினை எளிதாக்கும். எனவே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இந்த அக்டோபர் மாதத்திலிருந்தாவது மகளிர் அனைவரும் தங்கள் உடல் நலத்திற்கான முதற்படியை எடுப்பதோடு மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்து புற்றுநோயை வெல்வோம்.

இவ்வாறு டாக்டர் யோகஷாலினி கூறினார்.


Next Story