அர்ஷ்தீப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை என்ன தெரியுமா..?


அர்ஷ்தீப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை என்ன தெரியுமா..?
x
தினத்தந்தி 24 April 2023 3:34 AM IST (Updated: 24 April 2023 3:37 AM IST)
t-max-icont-min-icon

அர்ஷ்திப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக உடைந்து சிதறியது.

கிரிக்கெட்டில் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்.இ.டி. வகை ஸ்டம்பில் கேமரா, மைக்ரோ போன் பொருத்தப்பட்டிருக்கும். அர்ஷ்திப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று அடங்கிய ஒரு செட் எல்.இ.டி. ஸ்டம்பு மற்றும் பெய்ல்சின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்பை காலி செய்து விட்டதால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பாகும்.


Next Story