மளமளவென சரிந்த விக்கெட்டுகள்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் - கேமரூன் க்ரீன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்


மளமளவென சரிந்த விக்கெட்டுகள்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் - கேமரூன் க்ரீன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
x

Image Courtesy: AFP

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததால் பெருத்த சச்சரவுகள் ஏற்பட்டன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டி போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதில் கேப்டன் டீன் எல்கர் 26 ரன்னிலும், சாரெல் எர்வீ 18 ரன்னிலும், டீ புரூய்ன் 12 ரன்னிலும், டெம்பா பவுமா 1 ரன்னிலும், ஜோண்டோ 5 ரன்னில்லும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெர்ரையன், மார்கோ ஜேன்சன் இருவரும் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 179 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. இதில் வெர்ரையன் 52 ரன்னிலும் , மார்கோ ஜேன்சன் 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 68. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், போலண்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.



Next Story