ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
x

image courtesy: BCCI Women twitter

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது.

மும்பை,

இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. எலிஸ் பெர்ரி 75 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 52 ரன்கள் எடுத்தார். மந்தனா ஒரு ரன்னில் ஏமாற்றினார்.

இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஆட்டம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.


Next Story