ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று தேர்வு
x
தினத்தந்தி 31 Aug 2018 8:45 PM GMT (Updated: 31 Aug 2018 8:38 PM GMT)

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது.

மும்பை,

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். முதுகு வலி பிரச்சினைக்கு மத்தியிலும் இங்கிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு, ஆசிய போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மற்றும் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் டோனி ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய அம்பத்தி ராயுடுவும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.


Next Story