நியூசிலாந்து-இந்தியா இடையேயான 20 ஓவர் போட்டி தொடர்: காயம் காரணமாக குப்தில் விலகல்


நியூசிலாந்து-இந்தியா இடையேயான 20 ஓவர் போட்டி தொடர்: காயம் காரணமாக குப்தில் விலகல்
x
தினத்தந்தி 4 Feb 2019 7:24 AM GMT (Updated: 4 Feb 2019 7:24 AM GMT)

நியூசிலாந்து-இந்தியா இடையேயான 20 ஓவர் போட்டித் தொடரில் இருந்து காயம் காரணமாக குப்தில் விலகியுள்ளார்.

ஆக்லாண்டு, 
 
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக குப்தில் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுளார். இருபது ஓவர் போட்டித் தொடர் வரும் 6-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி 8-ம் தேதி ஆக்லாந்திலும், 3-வது போட்டி ஹேமில்டனில் 10-ம் தேதியும் நடக்கிறது.

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், ஸ்காட் குக்ஜெலிஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபெர்ட், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்.

Next Story