அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: லயோலா அணி வெற்றி


அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: லயோலா அணி வெற்றி
x
தினத்தந்தி 1 March 2019 11:00 PM GMT (Updated: 1 March 2019 7:39 PM GMT)

அகில இந்திய கல்லூரி கிரிக்கெட் போட்டியில், லயோலா அணி வெற்றிபெற்றது.

சென்னை,

5-வது பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கல்லூரி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (இருபாலருக்கும்) சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் குருநானக் கல்லூரி அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் காயிதே மில்லத் அணியை தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில் குருநானக் ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் லயோலா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பச்சையப்பா அணியை வென்றது. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் எத்திராஜ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர்.ஜானகி அணியை தோற்கடித்தது.

Next Story