சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்


சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 10:39 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெளியேறியது.

இந்தூர்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் லீக் சுற்றில் நேற்று நடந்த கடைசி கட்ட ஆட்டங்களில் மும்பை அணி (பி பிரிவு) 46 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தையும், கர்நாடக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவையும், மராட்டியம் அணி (ஏ பிரிவு) 21 ரன்கள் வித்தியாசத்தில் ரெயில்வேயையும் சாய்த்தது. லீக் சுற்று முடிவில் தோல்வியே சந்திக்காத மராட்டிய அணி (16 புள்ளி) ‘ஏ’ பிரிவில் முதலிடமும், கர்நாடக அணி (16 புள்ளி) ‘பி’ பிரிவில் முதலிடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பலம் வாய்ந்த மும்பை அணி கடைசி லீக்கில் வெற்றி பெற்றும் 12 புள்ளியுடன் வெளியேறியது. இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

Next Story