ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
x
தினத்தந்தி 14 April 2019 10:20 PM GMT (Updated: 14 April 2019 10:20 PM GMT)

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ்–பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: மும்பை

நேரம்: இரவு 8 மணி

ரோகித் சர்மா/ விராட்கோலி

பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குயின்டான் டி காக், மலிங்கா, பும்ரா/டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மார்கஸ் ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி.

15 வெற்றி இதுவரை நேருக்கு நேர் 24 9 வெற்றி

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் மும்பை அணி 187 ரன்கள் குவித்தாலும் அந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது. ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரின் (89 ரன்கள்) அதிரடி ஆட்டம் மும்பை அணியின் வெற்றி வாய்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டது. கடந்த ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயம் அடைந்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக மலிங்கா களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக 6 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் விராட்கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். அவர்கள் இருவரையும் நம்பி தான் அந்த அணி அதிகம் இருக்கிறது எனலாம். யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்) சிறப்பாக பந்து வீசி வருகிறார். இருப்பினும் அவருக்கு அணியின் சக பந்து வீச்சாளர்கள் ஆதரவு தேவையானதாகும்.

பெங்களூருவுக்கு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தனது வெற்றி உத்வேகத்தை தொடர பெங்களூரு அணி எல்லா வகையிலும் முயலும். அத்துடன் இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக மல்லுக்கட்டும். அதேநேரத்தில் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப தனது முழு வேகத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Next Story