கவுதம் காம்பிரை வம்புக்கு இழுக்கும் அப்ரிடி


கவுதம் காம்பிரை வம்புக்கு இழுக்கும் அப்ரிடி
x
தினத்தந்தி 4 May 2019 7:21 AM GMT (Updated: 4 May 2019 7:21 AM GMT)

தான் எழுதி உள்ள சுயசரிதை புத்தகத்தில் சாகித் அப்ரிடி கவுதம் காம்பிரை வம்புக்கு இழுத்து உள்ளார்.

‘கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் அப்ரிடி சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், ‘37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல.

நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதி விட்டார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பிறந்த தேதி, மாதம் விவரத்தை சொல்லவில்லை. இந்த நாள் வரை ‘கிரிக்இன்போ’ வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த தேதி 1980-ம் ஆண்டு மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித்  அப்ரிடி தான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கவுதம் கம்பீர் எந்த ஒரு சாதனையும் புரியவில்லை ,அவர் மனதில் டான் பிராட்மேன் ஜேம்ஸ்பாண்ட் என்ற நினைப்பு உள்ளது.

Next Story