உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் உடல் தகுதி பெற்றார்


உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் உடல் தகுதி பெற்றார்
x
தினத்தந்தி 18 May 2019 11:30 PM GMT (Updated: 18 May 2019 11:00 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ், உடல் தகுதி பெற்றார்.

புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதர் ஜாதவ் தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பார்ஹர்ட் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கேதர் ஜாதவ் முழு உடல் தகுதியை பெற்று விட்டதாக, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பார்ஹர்ட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் வருகிற 22-ந் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்லும் இந்திய அணியினருடன் கேதர் ஜாதவ் செல்வாரா? என்பதில் நிலவி வந்த சந்தேகம் முடிவுக்கு வந்து இருக்கிறது.

Next Story