அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்


அணியில் இருந்து நீக்கப்பட்டதால் வித்தியாசமாக எதிர்ப்பை காட்டிய பாகிஸ்தான் பவுலர்
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 8:20 PM GMT)

அணியில் இருந்து நீக்கப்பட்டதால் பாகிஸ்தான் பவுலர் ஒருவர் வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் உத்தேச அணியில் இடம் பிடித்திருந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான், 15 பேர் கொண்ட இறுதி அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜூனைத் கான் தனது எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். வாயில் கருப்பு பட்டையை ஒட்டிக்கொண்டு அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை, உண்மை கசக்கும்’ என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார். பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவரை கண்டித்ததால் சில மணி நேரங்களில் அந்த டுவிட்டை அழித்து விட்டார்.

இதுவரை எந்த உலக கோப்பை தொடரிலும் விளையாடாத 29 வயதான ஜூனைத் கான் 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது அணிக்கு தேர்வான போதிலும் காயம் காரணமாக விலக நேரிட்டது நினைவு கூரத்தக்கது.


Next Story