லாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி - மயங்க் அகர்வால் டுவீட்


லாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி -  மயங்க் அகர்வால் டுவீட்
x
தினத்தந்தி 14 May 2020 7:50 AM GMT (Updated: 14 May 2020 7:50 AM GMT)

லாக் டவுனில் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி என்று மயங்க் அகர்வால் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கிரிக்கெட் வீரர்கள் எங்கும் செல்ல முடியாமல் தங்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருகிறார்கள். லாக்டவுன் சமயத்தில் பயணம் செய்வது கடினம் என்றாலும், இந்திய அணியின் டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பயணம் செய்வது எப்படி என்று ரசிகர்களுக்கு எளிய வழிமுறையைக் கூறியுள்ளார். 

மயங்க் அகர்வால், இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடைகள் மற்றும் போஸ் ஆகியவற்றைக் காட்டுகின்றன. முதல் படம் அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது, மற்றொன்று அவர் ஒரு கடற்கரையில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஒரே மாதிரியான போஸைத் தவிர, இரண்டு படங்களிலும் உள்ள மற்றொரு பொதுவான விஷயம், அவர் தனது வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, அவர் உலகத்தைப் பார்க்கிறார்.

“லாக்டவுனில் பயணம் செய்வது எப்படி. ஸ்டெப் 1: ஒரு நாற்காலி எடுத்துக்கொள்ளுங்கள்; ஸ்டெப் 2: உலகத்தைப் பாருங்கள்; ஸ்டெப் 3: உங்கள் கற்பனை செயல்படட்டும்,” என்று அகர்வால் டுவிட் செய்துள்ளார்.

Next Story