கிரிக்கெட்

இன்ஸ்டாகிராம் பதிவு: விராட் கோலி நெகிழ்ச்சி + "||" + Instagram post Virat Kohli Flexibility

இன்ஸ்டாகிராம் பதிவு: விராட் கோலி நெகிழ்ச்சி

இன்ஸ்டாகிராம் பதிவு: விராட் கோலி நெகிழ்ச்சி
விராட் கோலி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ருசிகர தகவல்களையும், வித்தியாசமான புகைப்படங்களையும் பதிவிட்டு கவர்ந்து வருகிறார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ருசிகர தகவல்களையும், வித்தியாசமான புகைப்படங்களையும் பதிவிட்டு கவர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6 கோடியே 95 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.


இந்த நிலையில் 2008-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போது உள்ள தனது போட்டோவையும், தற்போதைய போட்டோவையும் இணைத்து நேற்று வெளியிட்ட விராட் கோலி அதில், ‘2008 முதல் 2020 வரையிலான கிரிக்கெட் வாழ்க்கைப் பயணத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். என் மீது நீங்கள் (ரசிகர்கள்) வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். இது எனது ஆயிரமாவது இன்ஸ்டாகிராம் பதிவு’ என்று கூறி நெகிழ்ந்துள்ளார். இது 2030-ம் ஆண்டு வரை தொடர வேண்டும் என்று மூத்த வீரர் ஹர்பஜன்சிங் வாழ்த்தியுள்ளார்.