ஐ.பி.எல். போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் - ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்


ஐ.பி.எல். போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் - ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்
x
தினத்தந்தி 6 Sep 2020 12:23 AM GMT (Updated: 6 Sep 2020 12:23 AM GMT)

ஐ.பி.எல். போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

துபாய்,

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும், வெளிநாட்டு வீரர்களின் வருகையை கணக்கில் கொள்ள வேண்டியது இருப்பதாலும், போட்டி நடைபெறும் இடங்களில் வெவ்வேறான தனிமைப்படுத்துதல் விதிமுறை உள்ளதாலும் அட்டவணை வெளியாவதில் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகின.

போட்டி தொடங்க இன்னும் 2 வாரத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாததால் எப்போது? வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருப்பதுடன், சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேலிடம் நேற்று கேட்ட போது, ‘ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை இன்று (6-ந் தேதி)வெளியிடப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story