டோனியின் முடிவு வியப்பை தந்தது- சாம் கரண்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று அதிரடியாக விளையாடிய சாம் கரண், ஆட்டத்தின் போக்கை சென்னைக்கு சாதகமாக மாற்றினார்.
அபுதாபி,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தபோட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாம் கரண், அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை சென்னை அணிக்கு சாதகமாக்கினார். 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம் கரண், போட்டிக்கு பிறகு பேசும் போது, “ சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஜீனியஸ். டோனியின் முடிவு எனக்கு வியப்பை அளித்தது.
18-வது ஓவரை நாங்கள் இலக்கு வைத்தோம். சிக்சர் அடிக்க வேண்டும் அல்லது அவுட் ஆக வேண்டும் என்ற மன நிலையில் நான் சென்றேன். சில நேரங்களில் இது கைகொடுக்கும், சில நேரங்களில் பலனளிக்காது” என்றார்.
Related Tags :
Next Story