முதல் டெஸ்ட்: நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளராக களமிறங்கும் இந்தியர்..!


முதல் டெஸ்ட்: நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளராக களமிறங்கும் இந்தியர்..!
x
தினத்தந்தி 23 Nov 2021 9:41 AM GMT (Updated: 23 Nov 2021 9:41 AM GMT)

இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளராக களமிறங்க உள்ளார்.

கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபது ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளராக அஜாஸ் படேல் களமிறங்குகிறார். இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். மும்பையில் பிறந்த 33 வயதான அஜாஸ் படேல்  தனது 8 வயதில் அவரின் குடும்பத்தினர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதை பற்றி கேட்டபோது அவர் கூறுகையில், இந்தியாவில் நான் முன்பு பார்க்காத இடங்களை பார்க்கும்பாது அழகாக உள்ளது. இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடும் போது அது எந்த அணிக்கும் சவாலானதாக தான் இருக்கும். 

இந்திய மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும். இதனால் நான் இந்திய அணிக்கு எதிராக எனது அதிகபட்ச பங்களிப்பை அணிக்காக அளிப்பேன். இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஓர் சிறப்பான உணர்வாக உள்ளது. என்று அஜாஸ் படேல் கூறினார். 

நியூசிலாந்து அணிக்காக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஜாஸ் படேல் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story