ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு


ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 9:44 AM GMT (Updated: 7 Dec 2021 9:44 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட்க்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

ஆஷஸ்’ என்பது இவ்விரு அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியமிக்க உணர்வுபூர்வமான ஒரு தொடராகும். அதனால் எப்போதும் நீயா?, நானா? என இரு அணிகளும் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டுவார்கள்.

இந்நிலையில் நாளை தொடங்கும் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது 

இங்கிலாந்து அணி  :  ஜோ ரூட் (கேப்டன்)  ஸ்டூவர்ட் பிராட் , ரோரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜேக் லீச், டேவிட் மலான் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென்  ஸ்டோக்ஸ்,  கிறிஸ் வோக்ஸ் , மார்க் வுட் 


Next Story