ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு


ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 10:00 AM GMT (Updated: 2021-12-15T15:30:45+05:30)

இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் (நாளை) வியாழக்கிழமை தொடங்குகிறது

அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில்  (நாளை) வியாழக்கிழமை தொடங்குகிறது. பகல்-இரவு போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இங்கிலாந்து அணி   : ஜோ ரூட் (கேப்டன்)  ஸ்டூவர்ட் பிராட் , ரோரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜேக் லீச், டேவிட் மலான் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென்  ஸ்டோக்ஸ்,  கிறிஸ் வோக்ஸ் ,ஜேம்ஸ் ஆண்டர்சன் Next Story