இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்றது


இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்றது
x
தினத்தந்தி 17 Dec 2021 12:56 AM GMT (Updated: 17 Dec 2021 12:56 AM GMT)

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

ஜோகன்னஸ்பர்க், 

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதையொட்டி விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணியினர் நேற்று காலை மும்பையில் இருந்து தனி விமானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டனர். மாலையில் இந்திய வீரர்கள் ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்த நிலையில், ‘தென்ஆப்பிரிக்காவை அடைந்து விட்டோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் பதிவிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டது.

தென்ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இந்திய வீரர்கள் அங்கு சென்றதும் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சில பரிசோதனைக்கு பிறகு இந்திய வீரர்கள், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இணைவார்கள்.

Next Story